நாட்டின் 73-வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று தேசம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2019-08-15 02:02 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா, மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும்  இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
தலைநகர் டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.  அப்போது 21 குண்டுகள் முழங்கின. வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். 

 பிரதமர் மோடி, தொடர்ந்து 6-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றிவைத்துள்ளார். முன்னதாக முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார்.  

டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக உரை ஆற்றி வருகிறார். தனது அரசின் சாதனைகளையும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.  

மேலும் செய்திகள்