பக்ரீத் பண்டிகை: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்வு

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Update: 2019-08-11 04:56 GMT
ஸ்ரீநகர், 

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. 

இணையதள சேவை, மொபைல் போன் சேவை துண்டிக்கப்பட்டு இருந்தது. 5 நாட்களுக்கும் மேலாக இந்த கட்டுப்பாடுகள் நீடித்த  நிலையில், படிப்படியாக சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த சூழலில், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில்,  ஸ்ரீநகர், பல்காம், அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

பள்ளத்தாக்கு பகுதியில் நிலைமை சீரடைந்துள்ளதால், நாங்கள் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளோம் என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கடைகள் திறந்துள்ளதால், ஆடைகளை வாங்க மக்கள் அதிக அளவு சந்தைப் பகுதிகளில் குவிந்துள்ளனர். ஸ்ரீநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்