எங்கள் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது: பாகிஸ்தான், உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் - இந்தியா கண்டிப்பு
பாகிஸ்தான், உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும், இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இந்தியா கூறியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியவுடன், பாகிஸ்தான் நடுக்கத்தில் உள்ளது. ஏனென்றால், இந்த முடிவால், பாகிஸ்தான் இனிமேல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.
காஷ்மீரின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதால், மக்களை திசைதிருப்ப முடியாது. பயங்கரவாதிகளை ஊக்குவிக்க முடியாது. எனவே, நடுங்குகிறது.
இந்தியா, போர் போன்ற சூழ்நிலையை உருவாக்குவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதை உலக நாடுகள் நம்பாது. அச்சமான சூழ்நிலையை உலகத்துக்கு காட்ட பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாகிஸ்தான், உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு வரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது வருத்தம் அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்திய தூதர் எப்போது வெளியேறுவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி உள்ளோம். பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு வான் பாதையை மூடியதாக கூறப்படுவது தவறு. காஷ்மீர் விவகாரம், குல்பூஷண் ஜாதவ் பிரச்சினையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவரை விடுவிக்க பாகிஸ்தானுடன் பேசி வருகிறோம்.
இந்தியா தனது நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் விளக்கி கூறியுள்ளது. பாகிஸ்தான், சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் பொய் தகவல்களை உரிய முறையில் முறியடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.