காஷ்மீரில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புமாறு தலைமை செயலாளர் உத்தரவு

காஷ்மீரில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2019-08-08 13:49 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து 4- வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 40 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் ராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். செல்போன், இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சில தொலைபேசி மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாநிலத்தில் அனைத்து மட்டத்திலும் பணியாற்றும் அரசு ஊழியர்கள் நாளைக்கு பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஊழியர்கள் பணியாற்ற உகந்த சூழலை  நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். அதேபோல், சம்பா மாவட்டத்தில் நாளை அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்