சட்டப்பிரிவு 371 ரத்து செய்யப்படாது - அமித்ஷா உறுதி

சட்டப்பிரிவு 371 ரத்து செய்யப்படாது என அமித்ஷா உறுதியளித்தார்.

Update: 2019-08-06 22:19 GMT
புதுடெல்லி,

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ்திவாரி விவாதத்துக்கு பதில் அளித்த உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:-

சட்டப்பிரிவு 370-க்கும், 371-க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. 370 தற்காலிக ஏற்பாடு. ஆனால் சட்டப்பிரிவு 371 மராட்டியம், குஜராத், ஆந்திரா, நாகலாந்து, மிசோரம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்பு பலன்களை அளிப்பது. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது. அனைத்து மாநிலங்களுக்கும் நான் அளிக்கும் உறுதி, நரேந்திர மோடி அரசு சட்டப்பிரிவு 371-ஐ ரத்து செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்