டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-08-06 02:00 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ஜாகீர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  11 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த தகவல் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.  காயமடைந்தோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்