காஷ்மீர் பெரிய யூனியன் பிரதேசமாக இருக்கும்: லடாக் 2-வது இடத்தை பிடிக்கும்
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், காஷ்மீர் பெரிய யூனியன் பிரதேசமாக இருக்கும். லடாக் 2-வது இடத்தை பிடிக்கும் என கருதப்படுகிறது.
புதுடெல்லி,
மத்திய அரசின் முடிவுப்படி ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக மாறியதும், நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக உயரும். அவை ஜம்மு-காஷ்மீர், லடாக், டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், டாட்ரா- நாகர் ஹவேலி, சண்டிகார், லட்சத்தீவு, அந்தமான்-நிக்கோபர் தீவுகள்.
இதில் நிலப்பரப்பின் அடிப்படையில் காஷ்மீர் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் 2-வது இடத்தையும் பிடிக்கும். தற்போது டெல்லி, புதுச்சேரி ஆகியவற்றுக்கு மட்டுமே சட்டசபை உள்ளது. இதில் காஷ்மீரும் இணைந்து சட்டசபை மற்றும் கவர்னர்கள் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மூன்றாக உயரும். எம்.பி.க் களின் எண்ணிக்கை ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். இதில் 7 எம்.பி.க்களுடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது.