காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு: உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி வீடுகளை விட்டு வெளியேற தடை

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது.;

Update: 2019-08-04 21:04 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பயணத்தை முடித்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப மாநில அரசு உத்தரவிட்டது. அங்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் போராடுவோம் என நேற்று ஸ்ரீநகரில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற தடை விதித்ததாக தெரிகிறது. ஸ்ரீநகர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கு மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்