மிக விரைவில் தேர்தலுக்கு தயாராகுங்கள் - முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி

தற்போதைய ஆட்சி நிலையான ஆட்சியில்லை, மிக விரைவில் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று தொண்டர்களிடையே கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.

Update: 2019-08-04 14:43 GMT
பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமி தொண்டர்களிடையே  கூறியதாவது: 

தற்போதைய ஆட்சி நிலையான ஆட்சியில்லை, மிக விரைவில் தேர்தலுக்கு தயாராகுங்கள்.  17 தொகுதிகள் அல்லது 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கலாம். கர்நாடக அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. தற்போது நாம் எந்த கூட்டணியிலும் இல்லை. நமக்கு, எந்த கூட்டணியும் தேவையில்லை. எனக்கு அதிகாரம் தேவையில்லை. உங்களின் அன்பு தான் தேவை. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்