அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை: ஆர்.எஸ்.எஸ். வரவேற்பு
அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை ஆர்.எஸ்.எஸ். வரவேற்றுள்ளது.;
நாக்பூர்,
அயோத்தி வழக்கில் 6-ந் தேதியில் இருந்து தினந்தோறும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை ஆர்.எஸ்.எஸ். வரவேற்றுள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராமர் கோவில் கட்டுவதில் உள்ள சட்ட இடையூறுகள் விலகி, குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். அதன்மூலம் ராமர் கோவில் கட்ட வழி பிறக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.