உடல் தகுதி இல்லாத போலீசாருக்கு கட்டாய ஓய்வு உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு

உத்தரபிரதேசத்தில் 4 மாவட்டங்களில் உடல் தகுதி இல்லாத 7 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 போலீஸ்காரர்கள் என மொத்தம் 25 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

Update: 2019-07-08 23:58 GMT
பரேலி,

முதல்-மந்திரி அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேச போலீஸ் சட்டத்தின் 56-வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதன் காரணமாக சம்பந்தப்பட்ட போலீசாரின் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், 3 மாத சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் டி.ஐ.ஜி. ராஜேஷ் குமார் பாண்டே நேற்று தெரிவித்தார்.

கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ள 25 பேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், ஒழுங்கீனம் தொடர்பான வழக்குகள் அவர்கள் மீது நிலுவையில் இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

மேலும் செய்திகள்