காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

Update: 2019-07-05 15:47 GMT

ஸ்ரீநகர், 

சோபியான் மாவட்டம் பத்போர்–நார்வானி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 
உடனே பாதுகாப்பு படையினர் காலை அந்த பகுதிக்கு விரைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியை தொடங்கினர். அவர்கள் குறிப்பிட்ட பகுதியை நெருங்கியதும் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த சமீர் சேக் என்ற பயங்கரவாதி பலியானார். அவரது உடலையும், அருகில் இருந்த துப்பாக்கி மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்தும், பாதுகாப்பு முகமைகளை குறிவைத்தும் நடத்திய தாக்குதலில் தொடர்புடையவன் எனக் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்