இளைஞர்களுக்காக என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா: நிர்மலா சீதாராமன்
என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.;
புதுடெல்லி
மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து பட்ஜெட் உரை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.
அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டிவி சேனல் துவங்கப்படும். இதில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும்.
* புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
* என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்
* ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் மூலமாக, ஆய்வு கல்வி அதிகரிக்கப்படும். அனைத்து துறைகளிலும் உள்ள நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும்.
* 400 கோடி ரூபாய், இதற்காக ஒதுக்கீடு. ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு வெளிநாட்டு மாணவர்களை நமது கல்வி முறையை கற்றுத்தர ஊக்கப்படுத்துவோம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்தியா வரும்போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும்.
* பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம்.
* பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ், 'பாரத் நெட்' என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம்.