1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகளை மேம்படுத்த ரூ.80,250 கோடி ஒதுக்கீடு -நிர்மலா சீதாராமன்

1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2019-07-05 06:47 GMT
புதுடெல்லி

மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து பட்ஜெட் உரை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்  உரையை வாசிக்க தொடங்கினார்.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:- 

*  உணவுத்துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்கு காரணம் இந்திய விவசாயிகள் .

* பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால், அதை மேம்படுத்த நாடு முழுக்க காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 2019-20ம் ஆண்டில் 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும்.

*  1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* 1.95 கோடி வீடுகள் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.

* 2024-ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு. இதற்காக ஹர்கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்