கிராமிய வங்கி பணி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் : நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கிராமிய வங்கி பணியாளர்கள் தேர்வு ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படுகிறது. இது தவிர்த்து, தமிழ், மலையாளம், மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும்.

Update: 2019-07-04 23:00 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிக்கை அளித்து பேசினார்.

அப்போது அவர், ‘‘உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவதை விரிவுபடுத்துகிற வகையில், சம வாய்ப்பினை வழங்குகிற விதத்தில் மாநிலங்களில் உள்ள கிராமிய வங்கிகளில் அதிகாரிகள், அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தியுடன் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்’’ என கூறினார்.

இதே அறிக்கையை மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையிலும் அளித்தார்.

மேலும் செய்திகள்