‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது -சீதாராம் யெச்சூரி கண்டனம்

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-19 13:00 GMT
நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இதற்காக இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள்  கலந்து கொள்ளவில்லை. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில்,  நாடாளுமன்றத்திற்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் என்பது அரசியமைப்புச்சட்டம் வழங்கி உள்ள அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரத்தையே சேதப்படுத்துவதாகும். திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையின் வேரினை பாதிக்கும் என்ற உண்மையின் அடிப்படையில் எங்களின் எதிர்ப்பு இருக்கிறது.

அரசமைப்பு சட்டத்தை திருத்தி அதன் மூலம் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தலாம் என்று நிதிஆயோக் அமைப்பு ஆலோசனை அளித்துள்ளது. செயற்கையாக எந்தவிதமான முயற்சிகள் செய்து ஒரே நேரத்தில் சட்டப்பேரைவக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்தால் அதை முழுமையாக எதிர்ப்போம். இது நாடாளுமன்ற ஜனநாயக முறையையும் சேதப்படுத்திவிடும் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்