மூளை காய்ச்சல் பாதிப்பு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்வு

பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.;

Update: 2019-06-15 05:24 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள மருத்துவமனைகளில் இரு வாரங்களுக்கு முன் 250 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 52 குழந்தைகளும், தனியார் மருத்துவமனையில் 15 பேரும் மூளைக் காய்ச்சல் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதால்  நிலைமையை சோதிக்க மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்