போலீஸ் நிலையத்தில், தன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணை மணந்த எம்.எல்.ஏ. - திரிபுராவில் சம்பவம்
திரிபுராவில் உள்ள போலீஸ் நிலையத்தில், தன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணை எம்.எல்.ஏ. ஒருவர் மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அகர்தலா,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் ரிமாவல்லி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தனஞ்சய். ஆளும் திரிபுரா சுதேசி மக்கள் முன்னணியை சேர்ந்த இவர் மீது, இளம்பெண் ஒருவர் கடந்த மே 20-ந் தேதி அகர்தலா மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதில், தனஞ்செய் எம்.எல்.ஏ. தன்னுடன் நெருங்கி பழகியதாகவும், திருமணம் செய்வதாக கூறி கற்பழித்து விட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் தற்போது அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தனஞ்செய் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே அவர் முன்ஜாமீன் கேட்டு திரிபுரா ஐகோர்ட்டில் மனு செய்தார். ஆனால் இந்த மனுவை கடந்த 1-ந் தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
எனவே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகையை போலீசார் தொடங்கிய நிலையில், திடீரென அந்த இளம்பெண்ணை தனஞ்செய் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அகர்தலாவில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த இளம்பெண் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனஞ்செய் எம்.எல்.ஏ.வின் வக்கீல் தெரிவித்தார்.