நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை உள்பட 10 அவசர சட்டங்களை சட்டமாக்க நடவடிக்கை
நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை உள்பட 10 அவசர சட்டங்களை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசில் முத்தலாக் தடை உள்பட பல்வேறு அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அவை சட்டமாக நிறைவேறும் முன்பே கடந்த நாடாளுமன்றம் முடிவுக்கு வந்தது. இப்போது மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதால் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி 45 நாட்களுக்குள் அந்த அவசர சட்டங்கள் அனைத்தையும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் அல்லது அவை செல்லாததாகிவிடும்.
எனவே முத்தலாக் தடை, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தம், கம்பெனிகள் சட்டம், காஷ்மீர் சிறப்பு ஒதுக்கீடு திருத்தசட்டம், ஆதார், முறையற்ற டெபாசிட் திட்டங்கள் உள்பட 10 அவசர சட்டங்களை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.