கேரளாவில் 4 மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும் - கேரளாவுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' அறிவிப்பு

கேரளாவில் 4 மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்ட்டுள்ளது.

Update: 2019-06-06 18:37 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. 

மேலும், கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 10ம் தேதியன்று மிக கனமழை பெய்யும் எனவும் அதற்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' அறிவிப்பையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில், தற்போது, பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்