வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்பு
பிரதமர் மோடியின் மந்திரி சபையில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் மந்திரி சபையில் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர், மாநிலங்களவை எம்.பி.யாக குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளார்.
அதேசமயம், தமிழகத்தில் இருந்து அவரை மாநிலங்களவை உறுப்பினராக்க பரிசீலிப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பீகார் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.