பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பேற்றதற்கு உலக தலைவர்கள் வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Update: 2019-06-04 15:59 GMT
புதுடெல்லி,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. 

நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார் இதனையடுத்து நாட்டின் பிரதமராக 2-வது முறையாக  மீண்டும் நரேந்திர மோடி கடந்த 30-ம் தேதி (மே) பதவி ஏற்றுக்கொண்டார்

பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் நடைபெற்றது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், அவருக்கு உலக தலைவர்கள் வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்ட தென் கொரிய அதிபர் மூன் ஜே, ஜிம்பாப்வே அதிபர் மோக்வே சிமாசிசேவால், மொசாம்பிக் அதிபர் பிலிப் நியூஸி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வாழ்த்துக்கூறிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்