புதுச்சேரி அமைச்சரவை கூட்ட முடிவுகளை அமல்படுத்த 10 நாட்கள் தடை - சுப்ரீம் கோர்ட்

புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்த 10 நாட்கள் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-04 06:37 GMT
புதுடெல்லி:

புதுச்சேரி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் கவர்னர் கிரண்பேடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தனர்.

புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். இடைக்கால தடை விதிக்காவிட்டால் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என வாதாடினார். 

இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. வரும் 7ஆம்தேதி நடைபெற உள்ள புதுச்சேரி அமைச்சரவை முடிவை அமல்படுத்த 10 நாட்கள் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்