நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு : தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பார்க்கலாம்

நீட் தேர்வு முடிவு நாளை வெளியாக உள்ளது. தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இந்த முடிவுகளை பார்க்கலாம்.

Update: 2019-06-04 01:35 GMT
சென்னை, 

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த தேர்வு கடந்த மாதம் (மே) 5-ந்தேதியும், 20-ந்தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்