மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது மம்தா பானர்ஜி சந்தேகம்

மின்னணு வாகுப்பதிவு இயந்திரம் தொடர்பாக முழுமையான ஆய்வினை மேற்கொள்ள உண்மை அறியும் குழுவை அமைக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2019-06-03 14:59 GMT

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. மேற்கு வங்காளத்திலும் பா.ஜனதா 18 தொகுதிகளில் வென்று மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி கொடுத்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியுள்ளார். மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும், அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து வலியுறுத்த வேண்டும் என மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக முழு சோதனையை மேற்கொள்ள உண்மை அறியும் குழுவையும் ஏற்படுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். 

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செயல்பாடு தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளிடம் மம்தா பானர்ஜி ஆலோசனையை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். நமக்கு இயந்திரங்கள் வேண்டாம். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சி மேற்கு வங்காளத்திலிருந்து நடக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார். 

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவது தொடர்பாக வலியுறுத்த  23 எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுப்பேன் அமெரிக்காவிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

பணம், மீடியாக்கள் மற்றும் ஆட் பலம் கொண்டு தேர்தலை பா.ஜனதா வென்றுள்ளது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் செய்திகள்