சைக்கிளில் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷவர்தன், சைக்கிளில் வந்து தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

Update: 2019-06-03 05:34 GMT
புதுடெல்லி,

புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் முறைப்படி தங்கள் அலுவலகம் சென்று பொறுப்பேற்று வருகின்றனர். அந்த வகையில் இன்று ஹர்ஷவர்தன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தனது அலுவலகத்துக்கு சைக்கிளில்  அவர் சென்றார். 

கோப்பில் கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கிய ஹர்ஷவர்தனுக்கு, துறை சார்ந்த அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்