ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் மோதல்; ராணுவ வீரர் பலி

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2019-06-02 03:18 GMT
ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  4 வீரர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்த 5 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்