பிரதமர் மோடி 9-ந் தேதி இலங்கை பயணம் - வரவேற்க தயாராக இருப்பதாக சிறிசேனா தகவல்

பிரதமர் மோடி 9-ந் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரை வரவேற்க தயாராக இருப்பதாக சிறிசேனா தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-31 22:01 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். இந்த நிலையில், அவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி வருகிற 9-ந் தேதி இலங்கை வர உள்ளார். மோடியின் இந்த பயணம், இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் மிகுந்த மரியாதை அளிக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படும். அவரை வரவேற்க இலங்கை தயாராக உள்ளது’ என்றார்.

மேலும், ‘இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையினர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சென்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில நாடுகள் உதவின’ என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்