கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு - ஓய்வு பலன்களுக்காக ரூ.1,600 கோடி செலவு

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களின் ஓய்வு பலன்களுக்காக ரூ.1,600 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-31 21:18 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில், 2013 நிதி ஆண்டு வரை பணிக்கு சேர்ந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இந்த 5 ஆயிரம் பேரின் ஓய்வு பலன்களுக்காக மாநில அரசுக்கு ரூ.1,600 கோடி செலவு பிடிக்கிறது.

இந்த தகவல்களை மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வினியோகிக்கும் ஆன்-லைன் அமைப்பு ‘ஸ்பார்க்’ தெரிவிக்கிறது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பலன்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மாநில அரசு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவைப் பொறுத்தமட்டில் 2014 நிதி ஆண்டு முதல் வேலைக்கு சேர்கிற அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்