நாடு முழுவதும் பாரதீய ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் முன்னணி
நாடு முழுவதும் பாரதீய ஜனதா 300 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
புதுடெல்லி
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை பாரதீய ஜனதா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியும் சந்தித்தன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
பாரதீய ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாரதீய ஜனதா - 294
பகுஜன் சமாஜ்- 13
திமுக- 21
காங்கிரஸ் 51
சிவ சேனா -18
டிஆர்.எஸ் -11
திரிணாமுல்காங்கிரஸ்-22
ஐக்கிய ஜனதா தளம்-15
ஒய்எஸ்ஆர் காங்-21