ஒப்புகை சீட்டுகளை கடைசியில் எண்ண தேர்தல் கமிஷன் முடிவு - எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு
ஒப்புகை சீட்டுகளை கடைசியில் எண்ண தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
புதுடெல்லி,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ணி சரிபார்க்க உத்தரவிடக்கோரி, 21 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஒரு நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகை சீட்டுகளை மட்டும் எண்ணி சரிபார்க்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் கமிஷனை அணுகினர். ஒப்புகை சீட்டுகளை முதலிலேயே எண்ண வேண்டும் என்றும், அதில் முரண்பாடு காணப்பட்டால், 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஏற்கனவே உள்ள நடைமுறையையே பின்பற்றப்போவதாக அவர்களிடம் தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இருப்பினும், அக்கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் கமிஷன் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஒப்புகை சீட்டுகளை வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கடைசியில்தான் எண்ணுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், முதலிலேயே ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, சட்டசபை தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் வீதம் ஒப்புகை சீட்டுகள், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 16 லட்சத்து 49 ஆயிரம் அரசு ஊழியர்கள், இந்த தேர்தலில் தபால் ஓட்டு போட்டுள்ளனர். இவ்வளவு ஓட்டுகளை எண்ணுவதற்கு 2 மணி நேரம் ஆகும் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது.
எனவே, ஓட்டு எண்ணிக்கை தாமதமாவதை தவிர்ப்பதற்காக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்போதே தபால் ஓட்டுகளையும் ஒரே நேரத்தில் எண்ணுவதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.