தேசிய தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு சமிதி தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
தேசிய தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு சமிதி தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செய்தியாளர் சந்திப்பின்போது தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஐதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பரிரக்சனா சமீதி அமைப்பின் தலைவர் கர்னி ஸ்ரீசைலம் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது அங்கிருந்த நபர், கர்னி ஸ்ரீசைலத்தை கடுமையாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது.