வாக்கு எண்ணிக்கை; புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவு

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வருகிற 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2019-05-21 15:01 GMT
புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன.  தொடர்ந்து கோடை வெயிலில் அனலையும் பொருட்படுத்திடாமல் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ந்தேதி நடந்து முடிந்தது.  இதனுடன் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.  இதன்பின் அடுத்தடுத்த கட்டங்களாக தொடர்ந்து தேர்தல் நடந்தது.  கடந்த ஞாயிற்று கிழமை இறுதி கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.  தேர்தல் அமைதியாக வன்முறை எதுவும் இன்றி நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 23ந்தேதி நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடும்படி கலால் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்