தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் கூட்டத்தில் முடிவு

தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2019-05-21 10:54 GMT
புதுடெல்லி

பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில்  தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்  அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியானது. எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம்  எழுதி இருந்தார்.

இந்த நிலையில், இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அசோக் லவாசா  பங்கேற்றார். 

கூட்டத்தில், தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் இவ்வாறு முடிவு  எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்