புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.;

Update: 2019-05-18 09:32 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பென்ஸ்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலை நடத்தினர். இருதரப்பு இடையிலான சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் அடையாளம் தெரிய வரவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்