விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-05-17 04:27 GMT
புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகள் அவ்வவ்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், அவந்திபோரா விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்