நான் அப்பவே டிஜிட்டல் கேமிரா மற்றும் இ-மெயிலை பயன்படுத்தினேன் : மீண்டும் சர்ச்சையில் மோடி

டிஜிட்டல் கேமிரா மற்றும் இ-மெயில் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-13 12:06 GMT
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி நேர்காணலின் போது பொய் சொல்லிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய மோடி, தான் 1987,1988-களிலே டிஜிட்டல் கேமிரா மற்றும் இ-மெயில் பயன்படுத்தியதாக தெரிவித்தார். இந்நிலையில், கோடக் நிறுவனம் 1995 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் DC 40 என்ற முதல் நுகர்வோர் டிஜிட்டல் கேமிராவை வெளியிட்டது. 

1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவில் பொது இணைய சேவையை வித்ஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (VSNL) அறிமுகப்படுத்தியது. பின்னர் மோடி எப்படி 1987,1988-களிலே டிஜிட்டல்  கேமிரா மற்றும் இ-மெயிலை பயன்படுத்தியிருக்க முடியும். மோடி ஒரு பொய்யர் என நெட்டிசன்கள் பிரதமரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்