நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களில் வெற்றி பெறும் - வீரப்ப மொய்லி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும் என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.;
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளில் நாங்கள் முன்னிலை வகிப்போம். மாநில வாரியாக நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து பகுப்பாய்வு செய்து பாருங்கள். பாரதீய ஜனதா கூட்டணி அரசு வீழ்ந்து விடும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள் எனக் கூறியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி களம் இறக்குமா? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் பெரிய கட்சி, குறிப்பாக எதிர்க்கட்சிகளில் பெரிய கட்சி. நிச்சயமாக எதிர்க்கட்சி முன்னணிக்கு நாங்கள் தலைமை வகிப்போம். அதற்கான வாய்ப்பு சாதகமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிற எதிர்க்கட்சிகள் தங்களுடன் கூட்டணிக்கு வரும் எனவும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.