டெல்லியில் 21-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்?
டெல்லியில் வரும் 21-ம் தேதி ராகுல்காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மே 21-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்துவது குறித்து சந்திரபாபு நாயுடு மற்றும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
19-ம் தேதியுடன் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய வியூகங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் வரும் 21-ம் தேதி ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு இரண்டு தினங்களுக்கு முன் இந்த கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.