அதிகாரி என கூறி பணம் பறிக்க முயன்றவருக்கு தர்மஅடி கொடுத்த பெண்
லஞ்ச தடுப்புப்பிரிவு அதிகாரி என கூறி ஏமாற்ற முயன்றவரை பெண் ஒருவர் புரட்டி எடுத்த சம்பவம் நடந்துள்ளது.;
ஜாம்செட்பூர்
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரை சேர்ந்த பெண் ஒருவரை அணுகிய டிப்டாப் நபர், தம்மை லஞ்ச தடுப்புப்பிரிவு அதிகாரி என கூறியுள்ளார். அப்போது 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு அந்தப் பெண்ணை அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அவர் போலி அடையாள அட்டை வைத்திருந்ததைக் கண்டுபிடித்த அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர், அதிகாரி என கூறியவரை கீழே தள்ளி புரட்டி எடுத்தார். பின்னர் அந்தப் பெண் காலணியால், அந்த நபரை அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்தார்.