அமேதியில் வாகனம் கவிழ்ந்து தேர்தல் அதிகாரி பலி

அமேதியில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் பலியானார்.

Update: 2019-05-07 18:57 GMT
அமேதி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அதற்கான மையத்தில் ஒப்படைப்பதற்காக ஒரு வாகனத்தில் ஏற்றிச்சென்று கொண்டிருந்தனர்.

அந்த வாகனம் திடீரென கவிழ்ந்தது. இதில், தேர்தல் அதிகாரி ஒருவர் பலியானார். அவர் பெயர் ஓம் பிரகாஷ் (வயது 40). பாதுகாப்பு படையினர் உள்பட 24 பேர் காயம் அடைந்தனர்

மேலும் செய்திகள்