ராஜீவ் காந்தி குறித்து பேச்சு: மோடி மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்
ராஜீவ் காந்தி குறித்த மோடியின் பேச்சுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், ராஜீவ் காந்தி ‘மிஸ்டர் கிளீன்’ என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை ‘நம்பர்–1’ ஊழல்வாதியாக தான் முடிவடைந்தது என கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக தேர்தல் கமிஷனர்களை நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, இந்திய கலாசாரத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.