ஒடிசா மாநிலத்தில் ‘பானி’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
ஒடிசா மாநிலத்தில் ‘பானி’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. தொலைத்தொடர்பு, மின் வினியோகம் சீரமைப்பு பணி போர்க்கால அடிப்படையில் மும்முரமாக நடந்து வருகிறது.;
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘பானி’ புயல் தாக்கியது. தலைநகர் புவனேஸ்வர், பூரி, குர்தா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
10 ஆயிரம் கிராமங்களும், 52 நகர்ப்பகுதிகளும் பாதிப்பு அடைந்துள்ளன. புயல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 29 ஆக உயர்ந்தது. பூரி நகரில் மட்டும் 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தலைமை செயலாளர் ஏ.பி.பதி தெரிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலையை கொண்டு வரும் பணி போர்க்கால அடிப்படையில் மும்முரமாக நடந்து வருகிறது. தொலைத்தொடர்பு வசதிகள் 70 சதவீதம் சீரமைக்கப்பட்டு விட்டன. 60 சதவீத தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்பட தொடங்கி விட்டன. மின் வினியோகம் இன்னும் சீரமைக்கப்படாத இடங்களில், டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் தொலைத்தொடர்பு கோபுரங்கள் இயக்கப்படுகின்றன.
அதுபோல், தண்ணீர் வினியோகமும் பகுதி அளவுக்கு சீரமைக்கப்பட்டு விட்டது. ஆனால், மின் வினியோகத்தை கொண்டு வருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் அப்பணி நடந்து வருகிறது. மத்திய உருக்கு அமைச்சகம், 3 ஆயிரத்து 500 உருக்கு மின்கம்பங்களை அனுப்பி வைத்துள்ளது. மத்திய மின்துறை அமைச்சகம், டீசல் ஜெனரேட்டர்களை கொடுத்து உதவியது. சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மருந்துகள் மற்றும் இதர நிவாரண பொருட்களை ராணுவ அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
புயல் தாக்குதலை தொடர்ந்து, 138 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றில், 85 ரெயில்கள் மீண்டும் ஓடத்தொடங்கி விட்டன. புவனேஸ்வர்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இயக்கப்படவில்லை. புவனேஸ்வருக்கு 41 விமானங்கள் மீண்டும் சேவையை தொடங்கி உள்ளன. இருப்பினும், புவனேஸ்வர் விமான நிலையம் இன்னும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது.
மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், ஒடிசா மாநில புயல் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், மத்திய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தொலைத்தொடர்பு, மின்சாரம், தண்ணீர் ஆகிய சேவைகளை கொண்டு வருவதில் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு மத்திய அரசு அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று நிதி உதவி அறிவித்தார். கடுமையாக பாதிக்கப்பட்ட பூரி மாவட்டம் மற்றும் குர்தா மாவட்டத்தின் சில பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ அரிசி, ரூ.2 ஆயிரம், பாலித்தீன் விரிப்புகள், குர்தா மாவட்டத்தின் பிற பகுதி மக்களுக்கு ஒரு மாதத்துக் கான அரிசி, ரூ.1,000, பாலித்தீன் விரிப்புகள் வழங்கப்படும் என்று நவீன் பட்நாயக் கூறினார்.
இதுபோல், மற்ற மாவட்டங்களில் பாதிப்புக்கு ஏற்றாற்போல், நிவாரண உதவியை அவர் அறிவித்தார். சமைத்த உணவு இன்னும் 15 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.