ஐதராபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கலா? என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
ஐதராபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.;
ஐதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ விற்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தனின் பேரில் கிங்ஸ் காலனிக்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்குள்ள 8 வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். ஐதராபாத்தில் கிங்ஸ் காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.