ஐதராபாத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.82 கோடி நகைகள் பறிமுதல்
ஐதராபாத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.82 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள சில நகைக்கடைகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அன்று இரவில் சுமார் 5,200 பின்தேதியிட்ட விற்பனை ரசீதுகள் போட்டு, ரூ.110.85 கோடியை வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்துள்ளதாக புகார் வந்தது.
இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் புகாரின்பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக தங்க நகைக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் ரூ.82.11 கோடி மதிப்புள்ள 145.89 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது முறைகேடான பணபரிவர்த்தனை பிரிவின்கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.