போஜ்புரி நடிகருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’ - 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியீடு

போஜ்புரி நடிகருக்கு பா.ஜனதாவில் சீட் வழங்கப்பட்டது. மேலும் 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

Update: 2019-04-15 19:28 GMT
புதுடெல்லி,

பா.ஜனதா சார்பில் மேலும் 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரும் உத்தரபிரதேச மாநிலத்துக்கான வேட்பாளர்கள் ஆவர்.

இவர்களில், பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கைவசம் இருந்த தொகுதியாகும். பிரவீன் நிஷாத், சாந்த் கபீர் நகரில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யாக இருந்த சரத் திரிபாதி, அதே கட்சி எம்.எல்.ஏ.வை ஷூவால் அடித்து சர்ச்சையில் சிக்கியதால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மந்திரி முகுத் பிகாரி, அம்பேத்கர் நகர் தொகுதியில் களம் இறங்குகிறார். இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 420 வேட்பாளர்களை பா.ஜனதா அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்