மீண்டும் பிரதமரானவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்க மோடி உத்தரவு

மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு, பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், அறிவியல் ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2019-04-15 09:05 GMT
புதுடெல்லி

முதல் கட்ட மக்களவை தேர்தல் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்னும் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து, மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தான் மீண்டும் பிரதமராவது உறுதி என்ற திடமான நம்பிக்கையில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டியவற்றிற்கு மோடி திட்டமிட்டு வருகிறார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவதை மையப்படுத்தி செயல் திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் அறிவியல் துறை முதன்மை ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்