ராகுல்காந்தி மேற்படிப்பு குறித்து அருண் ஜெட்லி கேள்வி?

ராகுல்காந்தி மேற்படிப்பு குறித்து அருண் ஜெட்லி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-04-13 08:40 GMT
பேஸ்புக் பக்கத்தில் ஜெட்லி பதிவிட்டுள்ள கருத்தில், ராகுலின் கல்வி தகுதி குறித்து பதில் கிடைக்காத பல கேள்விகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. வேட்பாளரின் கல்வித் தகுதியில் கவனம் செலுத்துபவர்கள், ராகுலின் கல்வித் தகுதி பற்றி கேட்கப்படும் கேள்விகளை கண்டு கொள்வதில்லை. அதற்கே அவர்கள் நிறைய பதிலளிக்க வேண்டும். அது அனைத்திற்கும் மேல் ராகுல் பட்டமேற்படிப்பு படிக்காமலேயே எம்.பில்., பட்டம் பெற்றுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கடிதங்கள், கையெழுத்து இயக்கங்கள் எல்லாம் காங்கிரசால் நடத்தப்படுபவை. மோடியின் செல்வாக்கை எதிர்கட்சிகளால் ஏற்க முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் பணிகள் எதையும் துவக்காத எதிர்க்கட்சிகள் இப்போது ரபேல் அல்லது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என தவறான தகவல்களை கூறி வருகின்றன. லோக்சபா தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நாடு முழுவதும் மோடி அலை பரவி உள்ளதை காட்டுகிறது. பல மாநிலங்களில் பொருந்தாத கூட்டணிகள் அமைத்துள்ள எதிர்க்கட்சிகள் அமைத்தும் அது பா.ஜ.க.வுக்கே சாதகமாகவே அமைந்துள்ளது என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்