கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் உறுதியான, வலிமையான ஆட்சி இருந்து வருவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் உறுதியான, வலிமையான ஆட்சி இருந்து வருவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் கூறினார்.
மும்பை
மகாராஷ்டிராவின் அகமத்நகரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் அதன் எதிர்காலம் வளமாக இருக்கும். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து துண்டாடப்பட வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பிரிவினைவாத கொள்கையில் இருந்து பிறந்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
அரசுக்கு வெளியில் இருந்தவர்களால் இயக்கப்பட்ட மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், நாடு பலவீனமாக இருந்ததை யாரும் மறக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் உறுதியான, வலிமையான ஆட்சி இருந்து வருவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என கூறினார்.