2019 மக்களவை தேர்தலில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம்

2019 மக்களவை தேர்தலில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் தெரியவந்துள்ளது.

Update: 2019-04-11 14:54 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ந்தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.  இதில், முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று துவங்கி நடைபெற்றது.

இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் தெரியவந்துள்ளது.

நாகலாந்து 78% மணிப்பூர் 78.2%, திரிபுரா 81.8% அசாம் 68% மேற்கு வங்காளம் 81% உத்தரகண்ட் 57.85% ஜம்மு காஷ்மீர் 54.49%, சிக்கிம் 69% மிசோரம் 60% அந்தமான் நிகோபார் தீவுகள் 70.67% ஆந்திரா 66% தெலுங்கானா 60% சட்டீஸ்கர் 56%

இறுதி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் சியாச்சினில் உள்ள ராணுவ வீரர்கள் வாக்களிக்கும் படிவத்தை ஆன்லைனில் டவுண்லோட் செய்து வாக்களித்து அதை உரிய வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்